மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டத் திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர் அதன்படி ஜூலை 1ஆம் தேதியுங்கள் எட்டாம் தேதி வரை மாநிலம் தழுவி அளவில் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்துள்ளனர் மேலும் இன்று தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் திருச்சி மத்திய அரசு அலுவலகமான பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் செயலாளர் சுகுமார் ஜாக் பன்னீர்செல்வம் செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன் முத்துமாரி ராஜலட்சுமி மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார் மூத்த வழக்கறிஞர்கள் வீரமணி முத்துகிருஷ்ணன் மற்றும் குற்றவியல் வக்கீல்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ் மற்றும் வக்கீல்கள் செந்தில்நாதன் மகேஸ்வரி வையாபுரி உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அலுவலக வாயில் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது வருகிற 8-ந் தேதி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பை தொடர்ந்து நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது. நீதிமன்ற புறக்கணிப்பு இருந்தாலும் ஒரு சில முக்கிய வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜர் ஆவார்கள் என்று வழக்கறிஞர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0