திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே தீனி கடை நடத்தி வருபவர் ராஜன் பிரேம்குமார் இவர் அனைத்து வணிகர்கள் நலச் சங்க மாவட்டத் தலைவராக உள்ளார். சம்பவத்தன்று இவரது கடைக்குச் சென்ற ஸ்ரீரங்கம் காவல் நிலைய எஸ்எஸ்ஐ ராதா(58),வறுத்த நிலக்கடலை கேட்டுள்ளார் கடையில் இருந்த ராஜன் பிரேம்குமாரின் மகன் ஷாம் ஆஸ்பாஷ் எவ்வளவு ரூபாய்க்கு வேண்டும் என்று கேட்டுள்ளார் இதனால் கோபமடைந்த ராதா நான் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில்தான் பணிபுரிகிறேன் வேறு ஸ்டேஷனிலிருந்தா வந்து கேட்கிறேன். கொஞ்சம் கொடுப்பா என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை கடையிலிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார் இதுகுறித்து ராஜன் பிரேம்குமார் வீடியோ ஆதாரத்துடன் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் செய்தார். உடனடியாக எஸ்எஸ்ஐ ராதாவை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டார். இந்நிலையில் எஸ்எஸ்ஐ ராதா பட்டாணி கடையில் தகராறில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக மாறியது இதுகுறித்து சக போலீஸார் கூறும்போது சிறப்பு உதவி ஆய்வாளர் ராதா கொஞ்சம் வெகுளியானவர் யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாது. அவர்செய்தது சரி என்று சொல்லவில்லை அவர் மீது புகார் அளித்தபின்னர் வீடியோவை சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே பரப்பியுள்ளனர் என்று தெரிவித்தனர். காவல்துறை எஸ்எஸ் ஐ பணி நீக்கம் செய்திருப்பது திருச்சி மாநகர காவல் துறை இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0