கோவை: மெட்ரோ ரயில் பணிகள் மதுரை மற்றும் கோவையில் நடைபெறுகிறது தமிழ்நாடு அரசு 2021 இல் அறிவித்தது திட்ட இயக்குனர் அர்ஜுனன் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூத்த போக்குவரத்து நிபுணர் வெங்கியு சென்னை மெட்ரோ ரயில் திட்ட தலைமை பொது மேலாளர் ரேகா ஆகியோர் உக்கடம் பேருந்து நிலையம் முன்பாக ஆய்வு நடத்தினர். உக்கடம் ராம் நகர் காந்திபுரம் கணபதி அத்திப்பாளையம் ஜங்ஷன் விநாயகபுரம் சித்ரா நகர் சரவணம்பட்டி விசுவாசபுரம் விஜிபி நகர் சத்தியமங்கலம் சாலையில் செல்கிறது. அதே போல கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குப்புசாமி மருத்துவமனை லட்சுமி மில் நவ இந்தியா பீளமேடு புதூர் ரிபப்ளிக் மால் hopes காலேஜ் கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ் எம்ஜிஆர் நகர் வெங்கடாபுரம் பார்க் பிளாசா நீலாம்பூர் ஸ்டேஷன் அவிநாசி சாலை வழியாக செல்கிறது கோவையில் அவிநாசி சாலை சக்தி சாலை திருச்சி சாலை ஆகிய சாலைகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சாலைகளாகும் மெட்ரோ ரயில் வந்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெகுவிரைவாக மெட்ரோ ரயில் கொண்டு வர வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0