ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மன், மார்ச் 16-ம் தேதி பஞ்சாப் முதல்வராக பதவியேற்கிறார்.
48 வயதான பக்வந்த் மன் பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தின் சடோஜ் கிராமத்தில் பிறந்தவர். அவரின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார். பகவந்த் சிங் மன், ஒரு முன்னாள் நகைச்சுவை நடிகர் ஆவார். தொலைக்காட்சியில் ‘ஜுக்னு மஸ்த் மஸ்த்’, ‘ஜண்டா சிங்’ போன்ற நகைச்சுவை ஷோக்களில் பல்வேறு கெட்டப் போட்டுக் கொண்டு பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலின் நடப்பு நிகழ்வுகளை காமெடி நிகழ்வாக மாற்றி மக்கள் முன்னிலையில் நடித்து பிரபலமானார். அரசியல் வாழ்க்கையில் குறைந்த அணுபவமே கொண்ட அவர், 11 ஆண்டுகளுக்குள் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னேறியுள்ளார்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அடைந்த வெற்றிக்கு பகவந்த் மானின் கடின உழைப்பும் காரணமாகும். இதன் காரணமாகவே ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் பஞ்சாபில் படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 117 சட்டமன்ற தொக்குதிகளில் ஆம் ஆத்மி 92 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. விடுதலை போராட்ட வீரர் பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் முதல்வராக பதவியேற்பேன்’ என பகவந்த் மான் தெரிவித்திருந்தர்.
இதனையடுத்து அவர் பஞ்சாப் ஆளுநரை நாளை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பகவந்த் மான் வருகிற 16ம் தேதி பஞ்சாப் முதல்வராக பதவியேற்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.