நீலகிரி மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க தன்னலமற்ற மக்கள் சேவைகளை செய்து தமிழ்நாடு நீலகிரி மக்களின் இதயத்தில் இடம் பெற்ற ஆரிகவுடர் அவர்களின் 53-ஆவது நினைவு நாள், விழா நிகழ்ச்சி என் சி எம் எஸ் உலகத்தின் ஆரிகவுடர் நினைவுவிழாக்குழு – படுக தேச பார்ட்டி – நிறுவன தலைவர் மஞ்சை.வி.மோகன் தலைமையில் உதகை ஊராட்சி தலைவர் மாயன், எம் சி எம் எஸ் முன்னாள் தலைவர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப. அவர்கள் கலந்துக்கொண்டு மலர்மாலை அணிவித்து
மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஆரிகவுடர் அய்யாவின் பேரன் ஜெய்பிரகாஷ், தாரா ஜெயபிரகாஷ் அவர்களை இவ்விழாவின் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவித்தார். இந் நினைவு நிகழ்வில் நாக்குபெட்ட. தலைவர் அய்யாரு, நீலகிரி விவசாய சங்க செயலாளர்கள் சேலக்கொரை.ரங்கசாமி, மந்தனை மணி, எடக்காடு.மகாலிங்கன், நஞ்சநாடு. ஆனந்த், மற்றும் முன்னாள் YBA செயலாளர் வக்கீல் ரவிக்குமார், வக்கீல் இந்திரா, வக்கீல் கவ சுப்பிரமணி, உதகை ஊராட்சி உறுப்பினர் குருத்துக்குளி. தருமன் மற்றும் கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன், என் சி எம் எஸ் மேலாண்மை இயக்குனர் முத்துக்குமார் உட்பட பலரும் கலந்துக்கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள், இந் நினைவு நாள் நிகழ்ச்சியை H.B. ஆரிகவுடர் நினைவுக்குழு மற்றும் படுக தேச பார்ட்டியின் நிர்வாகிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர், விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்புரையில் பேசியதாவது 53-ஆவது நினைவு நாள்.. நீலகிரி மாவட்டத்திற்கு வரலாற்று பெருமைச்சேர்த்த ஆரிகவுடர் அவர்களின் சீரிய சிந்தனையில் உருவான கூட்டுறவு துறையில் சந்தைமுறையை நாம் மென்மேலும் வளர்த்து, நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார. நிலையினை உயர்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், விவசாயிகளின் அனைத்து தேவைகளுக்கும், பொருளாதார நிலைக்கும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவியினையும் செய்திடும் என ஆரிகவுடர் நினைவு விழாவில் பேசினார்,நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் பங்கு காணப்படவில்லை, நீலகிரி விவசாய மக்களுக்காக உருவாக்கப்பட்ட என் சி எம் எஸ் கூட்டுறவு விற்பனை சங்கம்
ஆரிகவுடரின் நினைவாக பல ஆண்டுகளாக கடந்து வந்தாலும் விவசாயிகளை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாக வைக்காமல் விழாக்கள் மட்டும் நடைபெறுவது அதிகாரிகளின் மெத்தன போக்காக உள்ளது என்று விவசாய சங்க குறை தீர்க்கும் தலைவர் பிரகாஷ் வருத்தத்துடன் தெரிவிக்கின்றார், மற்றும் விவசாயிகள் பலர் கூறியதாவது மறைந்த ஐயா
ஆரிகவுடர் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்புகள் தராமல் இருப்பது எங்களை புறக்கணிப்பதற்கு ஒப்பாகும் என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர், விவசாயிகளுக்காகவே ஐயா ஆரிகவுடர் எடுத்த பல வெற்றியின் திட்டங்கள் இன்று வரை வரலாற்றின் சிறப்பாக உள்ள நிலையில் தற்போது விவசாயிகள்
மற்றும் விவசாய சங்கங்கள் அவமதிக்கப்படுவதை , என் சி எம் எஸ் நிர்வாகம் இதனை கவனம் செலுத்தி வரும் நாட்களில் விவசாயிகளுக்கு ஊறிய மதிப்பினை வழங்க வேண்டும் என்று விவசாய சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்,??
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0