வீடு புகுந்து 18 பவுன் தங்க நகைகள் திருடியகணவன் – மனைவி கைது.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிப்பவர் பார்த்திபன். இவர் கடந்த 20.06.2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது மகனை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவிலிருந்த 18 சவரன் தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவைகொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது .இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பத்ரிநாராயணன் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புலன்விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்று தனிப்படையினர் ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த குமார் மகன் பிரகாஷ்(33)மற்றும் பிரகாஷ் மனைவி தேவி (31) ஆகியோர்களை பிடித்து விசாரணை நடத்தினர்..அப்போது மேற்படி வீடு புகுந்து திருடியதை ஒப்புக்கொண்டனர். இதன் பேரில், பிரகாஷ்(33)அவரது மனைவி தேவி (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 18 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.குற்றவாளிகளை 2நாட்களில் கைது செய்து, நகையை மீட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.