கோவை வால்பாறையில் அடைமழை … வால்பாறையில் இயங்குகின்ற 99 பள்ளிகளுக்கு விடுமுறை – கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் மழை பொழிவு ஆரம்பித்து இருக்கின்றது. கோவை மாவட்ட வால்பாறை தாலுகா சின்னக்கல்லார் பகுதியில் அதிகபட்சமாக 198 மி.மீ. மழை பொழிந்திருகின்றது. வால்பாறை டவுன் , வால்பாறை பி.ஏ.பி. பகுதிகளில் 107 மி.மீ, சின்கோனா பகுதியில் 147 மி.மீ , சோலையாறு பகுதியில் 122 மி.மீ. அடை மழை பொழிந்து இருக்கின்றன. கோவை மாவட்டத்தின் சராசரியாக மழை பொழிவு 40 மி.மீ. என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கின்றது . இந்த நிலையிலே, வால்பாறையில் இயங்கும் 99 பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி விடுமுறை அறிவித்தார். மழை பொழிவு அதிகமாக இருப்பதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி இருக்கின்றார் .

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலும் 60 மி.மீ. வரை மழை பொழிந்த நிலையிலே, காடுகளில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றன . கோவை குற்றாலத்தில் கன மழை பொழிவால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றன . இதனால் வனத்துறை கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தளத்தை தற்காலிகமாக மூடி உள்ளன . அடுத்த அறிவுப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து இருக்கின்றனர் . கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தற்காலிகமாக  தடை விதித்து வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றனர். கோவை குற்றால நுழைவு வாயிலில் தடுப்புகளை வைத்து தீவிர கண்காணிப்பில் வனத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர்.