கோவை லட்சுமிநாயக்கன்பாளையம் (செலக்கரிச்சல்) ராஜாமணி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில்
நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது தகப்பனார் காலஞ்சென்ற சுப்பிரமணிய செட்டியார் அவர்களுக்கு கள்ளப்பாளையம் ஊராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட மஜரா சின்னக்குயிலையில் வானவில் வீதியில் நத்தம் பட்டா எண்.160- ன் படி 2131 சதுரடி விஸ்தீரணமுள்ள இடம் பாத்தியப்பட்டது. ஷை சுப்பிரமணியம் அவர்கள் கடந்த 23.02.1995 -ம் தேதியில் காலமாகிவிட்டார். மேற்படி சுப்பிரமணியம் அவர்களுக்கு வாரிசுகளான பழனியம்மாள் (சுப்பிரமணியம் மனைவி) மகள்கள் ராதாமணி, ராஜாமணி மற்றும் பத்மநாபன் ஆகியோர்கள் வாரிசுகள் ஆவார்கள் வாரிசுகளில் நடுவரான பத்மநாபன் காலம் சென்றுவிட்டார். அவரது வாரிசுகள் கற்பகம் ( பத்மநாபன் மனைவி) சிவரஞ்சனி மகள், அசோக்குமார் மகன் ஆகியோர் வாரிசுகள் ஆவார், வாரிசுகளில் ஒருவரான ராதாமணி அவர்கள் அவரது மருமகன் V.கோபி கள்ளப்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் ராதாமணி மகள் கல்பனா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து எனது பெயரையும் எனது சகோதரர் (லேட்) பத்மநாபன் ஆகியோர் வாரிசுகளையும் பெயர்களையும் விட்டு விட்டு பழனியம்மாள் ராதாமணி மட்டும் வாரிசு என்று போலியான வாரிசு சான்று பெற்று முறைகேடான வாரிசு சான்றிதழ் அடிப்படையில் ராதாமணி அவர்கள் தனது மகளின் பெயரில் கடந்த 30.10.2023 தேதி சிங்கநால்லூர் சார்பதிவாளர் ஆலவலகத்தில் 14948/2023 நெம்பராக ஒர் அரசு அதிகாரிகளை ஏமாற்றி தானசெட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேற்படி ஆவணத்தில் எனது பங்கு மற்றும் எனது சகோதரர் பங்குகளையும் சேர்த்து பதிவு செய்து கொடுத்துள்ளனர், ஆகையால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எனது பங்கு மற்றும் எனது சகோதரர் பங்குகளை மீட்டு தறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் ராதாமணியின் மகள் கல்பனா பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆக பணியாற்றி வருகிறார். பாப்பம்பட்டி ஊராட்சியில் முறைகேட்டில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ராதமணியின் மருமகள் V.கோபி கள்ளப்பாளையம் ஊராட்சி துணைதலைவர் முறைகேட்டில் ஈடுபட்டு காசோலை அதிகராத்தை மாவட்ட ஆட்சித்தலைவரால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கல்பனா மற்றும் V.கோபி 100 நாள் வேலை மற்றும் குடிமாரமத்துப்பணியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், தயவு கூர்ந்து நடவடிக்கை எடுத்து எனது வீட்டின் பங்கை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0