சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையிலிருந்தபோது சசிகலா, இளவரசிக்கு ஆகியோருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்புப் படை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்கள். அப்போது சசிகலா, இளவரசி ஆகியோருக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. அதேபோல, சிறைத்துறை முன்னாள் அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ மகனூருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும், ஏப்ரல் 16-ம் தேதி சசிகலா, இளவரசி ஆகியோர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
சசிகலா வர வேண்டும் என ஓ.பி.எஸ் விரும்புகிறார்… பழிவாங்கப்படுவோம் என இ.பி.எஸ் பயப்படுகிறார்!