கோவையில் விஷ சாராயம் கிடையாது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி. கோவை ஜூன் 21 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரத்தை பொருத்தவரைக்கும் விஷ சாராயம் என்பது கிடையவே கிடையாது இருந்தாலும் மாநகரில் கண்காணிப்பு பணிகளைதீவிர படுத்தி உள்ளோம். சுற்றிலும் உள்ள .சோதனை சாவடிகளில் வேறு வழியிலிருந்து கள்ளச்சாராயம் வந்துவிடாமல் இருப்பதற்காக தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. அது மட்டும் அல்லாது நுண்ணறிவு பிரிவு போலீசார் மூலமாக வெளியில் இருந்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பதையும் நாங்கள் தகவல்களை செய்து வருகிறோம் .அவ்வாறு இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகரை பொறுத்தவரைக்கும் அனைத்து சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடு படக்கூடிய இளைஞர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அவர்களுடைய செயல்கள் பதிவு செய்யப்பட்டு தானாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதி மீறல்களை செய்யக்கூடிய நபர்களை கண்டறிந்து அவருடைய வாகன எண்களை மட்டும் தனியாக எடுத்துஅவர்களுடைய வாகனங்கள் மீதும், அவர்கள் மீதும் அதிகபட்ச நடவடிக்கை எடுப்பதற்காக நாங்கள் புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறோம். டாஸ்மாக் மதுக்கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நடத்தக்கூடிய விற்பனை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. விதிமுறை மீறும் பார்களின் உரிமத்தை ரத்து செய்யப்படுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0