நீலகிரி மாவட்ட நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று முறை வெற்றி பெற்ற ஆ.இராசா எம்.பி கூடலூர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்,.

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக 3வது முறை வெற்றி பெற்று முதன் முதலாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு வருகை தந்த, திமுக கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களுக்கு
மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில், தேர்தல் பணி செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் முன்னிலையில், கூடலூர் காந்தி சிலை அருகில் கூடலூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள், கழக நிர்வாகிகள் கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, நெல்லியாலம் நகராட்சி தலைவர் சிவகாமி, கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் எனத் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.