ஜீப்பில் கஞ்சா கடத்தியவர் கைது.

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ,சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் நேற்று பி.என்.புதூர் மடத்தூர் பகுதியில் உள்ள ஒருகாலி மைதானம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு ஜீப்பில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜீப்பும், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை கடத்தி வந்த வடவள்ளி ஐ. ஓ.பி. காலனியை சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் அரவிந்த் (வயது 33) கைது செய்யப்பட்டார் இவர் மீது ஏற்கனவே திருப்பூர் |சாய்பாபா காலனி காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.