மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு.

கோவை: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வான் கரம்பேட்டையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவரது மகன் கணேசன் (வயது 36) கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.நேற்று வேலை முடிந்த பிறகு அங்குள்ள இரும்பு பைப்பை தொட்டார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.