கோவை: பெண் போலீஸ், போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக சவுக்கு சங்கரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி கோவை 4 -வதுஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு சவுக்கு சங்கரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0