அண்ணன் என்னடா தம்பி என்னடா பொது அதிகாரம் கொடுத்தால் எல்லாமே போச்சு

சென்னை மாங்காடு மலையம்பாக்கம் ரஹமத் நகர் சபாபதி மகன் கண்ணன். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து 1991 ஆம் ஆண்டு முதல் சினிமா துறையில் உதவி இயக்குனராக .பணியாற்றி வருவதாகவும்1998 ஆம் ஆண்டு பூந்தமல்லி தாலுக்கா லட்சுமி புரத்தில் வட அக்ரஹாரம் பகுதியில் 5497 சதுரஅடி கொண்ட வீட்டு மனை யை கணேசன் நாயக்கர் இடம் விலைக்கு வாங்கினேன். பொது வழிக்கு இடத்தை கொடுத்தது போக 1038 சதுர அடி இடத்தை தனது மனைவி சிவகுண வாசுகியின் தம்பி ஜெய கார்த்தி என்பவன் மேற்படி இடத்தில் 3 பிளாட்டுகள் கொண்ட அப்பார்ட்மெண்ட்டை கட்டி. அதில் ஒரு பிளாட் மற்றும் ரூபாய் 14 லட்சம் தருவதாக கூறியதா ல் 2012 ஆம் ஆண்டு ஜெய கார்த்தி என்பவனுக்கு பொது அதிகாரம் கொடுத்தேன். ஆனால் ஜெய கார்த்தி எனக்கு தெரியாமல் என்னுடைய இடத்தின் அருகே உள்ள 1004 சதுர அடி இடத்தை விலைக்கு வாங்கி நாலு பிளாட்டுகள் கட்டி மூன்று பிளா ட்டுகள் எனக்கு தெரியாமல் விற்பனை செய்து உள்ளான். இதைத் தெரிந்த நான் அவனுக்கு கொடுத்த பொது அதிகாரத்தை பவரை ரத்து செய்ய மனு கொடுத்தேன் ஆனால் சார்பதிவாளர் ஒரிஜினல் பத்திரமும் ஜெய கார்த்தியும் நேரில் வர வேண்டும் என்று கூறியதால். அவரை ரத்து செய்ய முடியவில்லை அதன் பின்னர் பிளாட் கட்டிக் கொடுக்கவில்லை பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தான் இதன் மதிப்பு ரூபாய் 70 லட்சம் ஆகும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் கொடுத்த புகாரின் பேரில் துணை ஆணையர் பெருமாள் முன்னிலையில் போலி ஆவண தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரஜிட் மேரி தலை மறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெய கார்த்தி வயது 43 தகப்பனார் பெயர் ராமச்சந்திரன் திரு வெங்கடபுரம் வெங்கம்பாக்கம் சென்னை என்பவனை சாமா ர்த்தியமாக கைது செய்தனர் கைது செய்யப்பட்ட அவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.