ஆவடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது இக் குறை தீர்ப்பு முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 55 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார் இக்குறை தீர்க்கும் முகாமில் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன் துணை ஆணையாளர்கள் ஜெயலட்சுமி போக்குவரத்து பிரிவு பெருமாள் குற்றப்பிரிவு பாலகிருஷ்ணன் மாதவரம் மற்றும் உதவி ஆணையாளர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் இக்குறை தீர்ப்பு சிறப்பு முகாம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்பட்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் துரித விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்