நீலகிரி மாவட்ட உதகை மிஷினரி இல் பகுதியில் உள்ள மாரநாதா ஆலயத்தில் நடைபெற்ற தேசிய கிறிஸ்தவ ஊழியர் ஐக்கிய சங்கம் உதயம் ஆகும் விழாவினை மாரநாதா ஆலயத்தின் முதன்மை போதகர் ஜார்ஜ் அவர்கள் தலைமையில். தேசிய கிறிஸ்தவ ஊழியர்கள் ஐக்கிய சங்கத்தின் முதன்மை பொறுப்பில் உள்ள சேர்மன் ஸ்டாலின், சங்கத்தின் தலைவர் ஜார்ஜ், துணைத் தலைவர் மணி, செயலாளர் ஜேம்ஸ், துணைச் செயலாளர் பிரதீப் ஜான்சன்,பொருளாளர் வினோத், செயற்குழு உறுப்பினர்கள் நிக்கோலஸ், பாலகணேஷ், ஜெயக்குமார், சார்லஸ் செல்லப்பா,எட்வின் தாமஸ், ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி துவங்கப்பட்டது, தேசிய கிறிஸ்தவ ஊழியர் ஐக்கிய சங்கத்தின் முக்கியத்துவம் நீலகிரி மத்தியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் செயலாற்றும் படியாக இந்த சங்கம் நற்செய்தி பணிகள் மட்டுமல்லாமல் சமூக சேவைமருத்துவ முகாம்,ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் தேவைகளை சந்திப்பது, அரசாங்கத்தோடு இணைந்து செயல்படவும் இந்த இயக்கம் துவங்கப்பட்டுள்ளது, இந்த தேசிய கிறிஸ்தவ ஊழியர் ஐக்கியம் எல்லா விதத்திலும் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உறுதுணையாக இருப்போம் என்பது முக்கியமாக உள்ளது, இந்த சங்கத்தில், கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கும் பணி எங்களது முக்கிய கடமையாகும் ஒற்றுமையோடும் பாகுபாடு இல்லாமல் அனைத்து கிறிஸ்தவ ஊழியர்கள் இணைந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வழியாக இந்த சங்கம் செயல்படும் என்பது உறுதியாகி உள்ளது, என்று சங்கத் தலைவர் கூறினார், நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 க்கும் மேலான செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வருகை தந்த அனைத்து சபையை சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர், சிறப்பு அழைப்பாளராக குன்னூர் ஆயர் தியா ப்ளஸ், சேலாஸ் பாஸ்டர் காலைப் செல்வராஜ், பாஸ்டர் ஜோதி ஜான் அருவங்காடு, பாஸ்டர் பிரவீன் குமார் கேத்தி இவாஞ்சலேட் மோசஸ் ஊட்டி, மற்றும் நீலகிரி பல பகுதிகளில் இருந்து வருகை தந்த போதகர்கள், ஆரோக்கிய ராஜ் பாஸ்டர், தனவந்தன் பாஸ்டர், சுரேஷ் பாஸ்டர், பாஸ்டர் பால் தயானந்தன், மற்றும் உதகமண்டலம் காஸ்பல் யூனியன் சௌந்தரராஜன், பாஸ்டர், ஸ்டீபன், செங்கல் மார்ட்டின் பாஸ்டர், சிவராஜ் ஜான்சன் பாஸ்டர், செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார், இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சி ஆக வருகை தந்த அனைத்து இறை ஊழியர்களும் இணைந்து புதிதாக நீலகிரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட தேசிய கிறிஸ்துவ ஊழியர்கள் ஐக்கிய சங்கத்தை தேவன் சமூகத்தில் வைத்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்து ஆசீர்வதித்து பிரஸ்தாபம் செய்தனர், இதில் சிறப்பு பிரார்த்தனை செய்ய பிஷப் தியோ பிளஸ் அவர்கள் ஆசீர்வதித்து புதிதாக உதயம் ஆயிருக்கும் சங்கத்தை வாழ்த்தினார்,தேசிய கிறிஸ்தவ ஊழியர் சங்கம் இன்று பிரஸ்தாபம் செய்யும்படியாக நீலகிரி கோவையில் இருந்தும் பிஷப்மார்கள் சி எஸ் ஐ, சி ஐ சி சார்ந்த டைசெஸ் பாஸ்டர்ஸ் 150 க்கு மேலானவர்கள் கூடி இந்த விழாவை சிறப்பித்தனர், இந்த விழா சிறப்பாக நடைபெற்றதற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம் செய்தியில் சங்கத்தின் துணைச் செயலாளர் ஜான்சன் பிரதீப் கூறினார், இந்த தேசிய கிறிஸ்தவர்கள் தொழிலாளர்கள் சங்கத்தை உங்களுக்கு அறிமுகம் படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறினார், தொடர்ந்து மாறாத ஆலயத்தின் மூத்த போதகர் ஜார்ஜ் சிறப்புரையில் கூறினார், முக்கியமாக இந்த சங்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் தேவ ஊழியர்களின் ஒவ்வொருவருடைய வாழ்வாதாரம் மற்றும் அவர்களுடைய தனிப்பட்ட உறுதுணையாகவும் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காகவும் உதவியாக இருப்போம் என்று கூறினார் ? தேசிய கிறிஸ்துவ ஊழியர் ஐக்கிய துவங்கும் படியாக தேவன் தந்த இந்த நாளுக்காக நன்றி சொல்லி நான் தொடர்ந்து உரையாற்றுகிறேன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஊழியர்களை ஒருங்கிணைத்து மற்றும் தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட ஊழியர்களையும் ஒருங்கிணைந்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் நலத்திட்டங்களையும் செய்யவே இச்சங்கம் உருவாக்கப்பட்டது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் , இந்த ஐக்கியத்தில் அனைவரும் வளர்ச்சி பெறவும் பயனடையவும் ஆசிர்வதிக்கப்படவும் வளரவும் நாங்கள் வாழ்த்துகிறோம் என்று சங்கத் தலைவர் ஜார்ஜ் கூறினார், உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ ஊழியர் ஐக்கிய சங்கத்தின் முக்கியமான நோக்கம் சமூக சேவை எந்த ஜாதி மதம் சார்பற்ற சமூக சேவையாக நீலகிரி மாவட்டம் மற்றும் அல்லாமல் தேசம் முழுவதிலும் சமூக சேவை பணிகளை செய்ய நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம் என்பதை முழு மனதுடன் தெரிவிக்கிறோம் என்று செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் கூறினார், நடைபெற்ற விழாவில் 40க்கும் மேலான சபைகளில் இருந்து போதகர்கள் வருகை தந்திருந்தனர்,மற்றும் 200க்கும் மேலான மக்கள் மற்றும் போதகர்கள் கலந்து கொண்டனர், விழா நிறைவாக செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் அவர்கள் வருகை புரிந்த அனைவருக்கும், விழா ஏற்பாடுகள் செய்த அனைத்து சபை மக்களுக்கும் மாரநாதா ஆலயத்தின் போதகர் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான விருந்து வழங்கப்பட்டது
What’s your reaction?
Love2
Sad0
Happy0
Sleepy1
Angry0
Dead0
Wink0