திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஆயிரத்து 112 கோடி ரூபாயில் புதிய டெர்மினல் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான திட்டத்தை 2019ஆம் ஆண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மூன்று ஆண்டுகளுக்குள் புதிய முனையம் கட்டி முடிக்கப்பட்டு, பிரதமர் மோடி கடந்த ஜனவரியில் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சிறப்பு வசதிகளுடன் இந்த முனையத்தில் ஒரே நேரத்தில் 3500க்கும் மேற்பட்ட பயணிகள் கையாள முடியும். 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பஸ்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. புறப்பாடுக்காக பத்து வாயில்கள் வருகைக்காக ஆறு வாயில்கள், அறுபது செக்-இன் மையங்கள் இமிகி ரேஷன் பிரிவுக்காக தலா 40 கவுண்டர்கள் பதிணைந்து எக்ஸ்ரேமெஷின்கள் 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மற்றும் பயணிகளின் உடமைகளை எடுத்து வர சாய்வுதள கன்வேயர் பெல்ட்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், புதிய முனையத்தில் தமிழக கலாச்சார பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாகக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம், புதிய முனையத்தின் முகப்பில் வண்ணமயமாக பயணிகள் கண்களைக் கவரும் வகையில் உள்ளது.இதேபோல, வருகை புறப்பாடு பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்த முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் விமான நிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் உள்ள விமான நிலையம் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று இன்று வந்த பயணிகள் எல்லோரும் பேசிக் கொண்டார்கள் திருச்சிக்கு இன்னும் ஏராளமான விமானங்கள் வந்து இறங்கி போகின்ற சூழ்நிலை இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. எது எப்படியோ இது திருச்சி மக்களுக்கு மிகவும் வரப் பிரசாதமாய் அமைந்து விட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0