கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள சோமனூர் பக்கம் உள்ள செம்மாண்ட பாளையத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 43)இவர். அங்குள்ள ஒன்னி பாளையத்தில் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது.கருத்து வேறுபாடு காரணமாக கணவன் – மனைவி இருவரும் கடந்த 11 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் ஹரிகரன் சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஹரிஹரன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது 2 -வது மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார் இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஹரிஹரன் நேற்று தனது ஒர்க்ஷாப்பில் மின்விசிறியில் வயரைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0