கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு “மெத்தபெட்டமின் ” என்ற உயர்ரக போதை பொருள் சப்ளை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த போதை பொருளை உட்கொள்வோர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதுடன், தூக்கமும் வராது. தூக்கம் வர மீண்டும் மீண்டும் கஞ்சா உள்ளிட்ட போதையை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். கல்லூரிகள் அதிகம் நிறைந்த கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற் பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் இடம் பெற்றிருந்தனர்.இவர்கள் தீவிரவிசாரணை நடத்தி சில நாட்களுக்கு முன்பு 6 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கவுதம், அபிமன்யு, பாசில், முகமது அர்சித், இஜாஸ், பெவின் ஆகிய 6 பேரிடம் இருந்து 102 கிராம் மெத்த பெட்டமின் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் குமார், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் ஆகியோர் கர்நாடக மாநிலம் பெங்களூரு தார்வார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போதை மருந்துகளை கடத்தி வந்து சப்ளை செய்தது தெரிய வந்ததுபிரவீன் குமார், வினோத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்திய போது போதை மருந்து கடத்தலில் கென்யா நாட்டைச் சேர்ந்த இவி பொனுகே (வயது 26) என்ற பெண்ணுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கூட்டாளியான உகாண்டா நாட்டைச் சேர்ந்த காவோன்கே என்பவரை சந்திக்க சென்ற போது அவரை கோவை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் .அவரிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. கைதான கென்யா பெண் இவி பொனுகே தார்வார்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சட்டக் கல்வி படிப்பதற்காக தங்கி உள்ளார். படிப்பை முடிக்கவில்லை. மேலும் அவரது விசாவும் காலாவதியாகி உள்ளது. தொடர்ந்து தார்வார் பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆன்லைன் மூலம் போதை மருந்து சப்ளை செய்துள்ளார். உகாண் டா நாட்டைச் சேர்ந்த அவரது கூட்டாளி காவோன் கே சிறையில் இருந்து கொண்டு போன் மூலம் பெறும் தகவலின் அடிப்படையில் அந்தந்த இடங்களுக்கு கென்யா பெண் போதை மருந்தை அனுப்பி வைத்துள்ளார். நேரடியாக கொடுக்காமல் ஆன்லைன் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு போதை மருந்து வைக்கப்பட்டு இருக்கும் இடத்தை கூகுள்- மேப் உதவியுடன் வாட ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி எடுத்துக் கொள்ளசெய்வார்.வாங்க வருபவர்கள் செல்போன் “லொகேஷன்” அடிப்படையில் சென்று போதை மருந்தை எடுத்துச் செல்வது வழக்கமாக கொண்டிருப்பதாக கென்யா பெண் கூறினார். இதில் கிடைக்கும் பணத்தை கென்யா பெண் இனி பொனுகே,உகாண்டா நாட்டைச் சேர்ந்த மற்றொரு நண்பரான டேவிட் என்பவர் டெல்லியில் தொடங்கி இருந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார் .இந்த கணக்கில் ரூ. 49 லட்சம் இருந்துள்ளது. அதனை முடக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.பெங்களூரு சிறையில் இருந்து கொண்டே போதை மருந்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வரும்கா வோன்கே என்பவரை கர்நாடக போலீஸ் மூலம் கைது செய்யவும்,கோவை போலீசார்நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கைதான கென்யா பெண் உட்பட 3 பேரையும் போலீசார்கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0