பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் நேருவின் மகன்அருண் நேரு அதிமுக சார்பில் சந்திரமோகன் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 24 சுற்றுகள் ஆக வாக்கு எண்ணிக்கை நடந்தது ஒவ்வொரு
சுற்றின் முடிவுகளும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் தெரிவிக்கப்பட்டது ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலில் திமுக வேட்பாளர் அருண்நேரு முன்னிலையில் இருந்தார் 24 சுற்று எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அருண் நேரு மொத்தம் ஆறு லட்சத்து 329 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார் இவருக்கு அடுத்தபடியாக அதிமுகவை சேர்ந்த என் டி சந்திரமோகன் 2 லட்சத்து 14 ஆயிரத்து 102 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் அருண் நேரு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை விட மூன்று லட்சத்து 68 ஆயிரத்து 107 வாக்குகள் கூடுதலாக பெற்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி கற்பகம் அறிவித்தார் பின்னர் வாக்கு என்னும் மையத்திற்கு வந்த அருண் நேருவுக்கு தேர்தல் அதிகாரி கற்பகம் தேர்தல் பொது பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா முன்னிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார் அப்போது அருண் நேருவின் தந்தையும் திமுக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான நேரு பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி எம்எல்ஏக்கள் பிரபாகரன் பெரம்பலூர் ஸ்டாலின் குமார் துறையூர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.