டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

நாடாளுமன்றத்துக்கு 7கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்க உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள்அனைத்தும் நாளை மூடப்படுகிறது. டாஸ்மாக் கடைகளுக்கான இந்த விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.