கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 4,500 போலீசார்

கோவை நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை சுற்றிலும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு முன் எச்சரிக்கை பணிக்காகநியமிக்கப்பட்டுள்ளனர்.  நகரம் முழுவதும் மொத்தம் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி ஓட்டு என்னும் மையத்தில் 1,425 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள 6 துணைக்கோட்ட பகுதிகளில் தலா 100 பேர் வீதம் 600 பேர் உட்பட புறநகர் பகுதிகளில் மொத்தம் 2025 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 4,525 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கையை யொட்டிகலவரத்தை தூண்டுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் ரவுடிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூலூரில் கல்லூரி மாணவர்கள் அறைகளில் தங்கி இருந்த 12 பேர் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மதுரை உள்ளிட்ட இடங்களில் பல வழக்குகள் உள்ளன .தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.