கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விவதர்சினி (44) இவர் சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் கோவை சேரன் மாநகரை சேர்ந்த செலினா என்பவருடன் பழகி, தான் ” டைகர்வே ” என்ற டிரஸ்ட் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சொல்லி ரூ.50, ஆயிரம் வாங்கியுள்ளார். பின்பு பணத்தை திரும்ப கேட்கும் போது பேஸ்புக்கை தவறாக பயன்படுத்தி, செலினவை பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்பு செலினா கொடுத்த புகாரின் படி செல்வபுரம் போலீசார் மேற்படி விஷ்வதர்சினியை கடந்த மாதம் 8-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் காவல்துறைக்கு எதிராக பொது மக்களை தூண்டும் விதமாகவும், மிரட்டுவதாகவும், பேசிய ஒரு வீடியோ பதிவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து செல்வபுரம் உதவி ஆய்வாளர் ராஜா கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ஏற்கனவே விஷ்வதர்சினி என்பவர் மீது கடந்த ஜனவரி மாதம் 24- ஆம் தேத கோவை துடியலூர் காவல் நிலையத்தில் காவல் துறையிருடன் ஆபாசமாக பேசி பணி செய்யலிடமால் தடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தின் மூலம் நண்பர் போல் நடித்து, பிரகாஷ் சுவாமி என்ற பத்திரிக்கையாளரை முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பி விடுவேன் என்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஷ்வதர்சினி மீது கடந்த 2018 ஆம் வருடம் சிறுமியை பற்றி சமூகவலை தளத்தில் அவதூறு பரப்பியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டு சென்னையில்வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் இவரை குற்றவாளி என அறிவித்து 3 வருட சிறை தண்டனை விதித்துள்ளது.மேற்படி விஷ்வதர்சினி என்பவர் இவ்வாறு தொடர்ந்து பொது மக்களையும், காவல் துறையினரையும் முகநூல் பக்கத்தில் ஏமாற்றுவதையும், மிரட்டுவதையும், அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். எனவே இவரின் நடவடிக்கை கட்டுபடுத்தும் பொருட்டு கோவை மாநகர காவல் ஆணையர்பாலகிருஷ்ணன் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதற்கான உத்தரவு நகல்நேற்று கோவை மத்திய பெண்கள் சிறையில் இருக்கும் விஷ்வதர்சினியிடம் வழங்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0