லகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில், கோடைவிழா 2024-ஐ முன்னிட்டு, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட படகுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்,
நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து சுற்றுலா
பயணிகளை கவர்வதற்காக கோடை விழா – 2024 சிறப்பாக கொண்டாடும் வகையில் உதகை படகு இல்லத்தில் துவங்கப்பட்டு, 02.06.2024 வரை 3 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த 3 நாட்கள் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறவுள்ளது. இன்று தக்ஷணாமூர்த்தி போக்ஸ் கலைக்குழு, கலைமாமணி மதுரை கோவிந்தராஜ் உள்ளிட்ட
கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், வடிவுடையம்மன் நாட்டியாலயா
குழு, ராம்தாஸ் குழு படுகர் நடனம், கோவை சாய் ஸ்டைல் நடனகுழு, திருச்சி மயூரி நாட்டியாலயா குழு என பல்வேறு கலைக்குழுக்களின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. கோடைவிழாவினை முன்னிட்டு, ஆண்கள், பெண்களுக்கான
இரட்டையர் படகு போட்டி, துடுப்பு போட்டி, தம்பதியர் படகு போட்டி, பத்திரிக்கையாளர் மற்றும்அரசு அலுவலர்களுக்கான படகு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், பெண்கள் மற்றும் ஆண்கள் இரட்டையர், துடுப்பு படகு போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார், முன்னதாக, தக்ஷணாமூர்த்தி போக்ஸ் கலைக்குழு, கலைமாமணி மதுரை கோவிந்தராஜ் ஆகிய கலைக்குழுவினரின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன், மாவட்ட சுற்றலா அலுவலர் ஜெகதீஸ்வரி மற்றும் சுற்றுலா அலுவலர்கள் அரசுத்துறை அலுவலர்கள், போட்டியாளர்கள் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0