கோவை: நீலகிரி மாவட்டம் , சோலூர், ஒரட்டியை சேர்ந்தவர் சிவ மகேந்திரன். இவரது மகள் சிவானி ( வயது 21) இவர்கோவை காந்திமா நகரில்தனது அக்கா சில்பாவுடன் தங்கியிருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சிவானி தனது அக்கா சில்பாவுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில தன்னுடன் படித்து வந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை தேட வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து அக்கா சில்பா பீளமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0