கோவை அருகே உள்ள உருமாண்டம் பாளையம், அஷ்ட லட்சுமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் பேபி (வயது 65 )அந்த பகுதியில் ரயில் பாதை உள்ளது. அதை கடந்து தினசரி நடை பயிற்சிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை நடைப்பயிற்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது அந்த வழியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த மெமு ரெயில் பேபி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பேபி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரகுநாதன் சம்பவஇடத்துக்குச் சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0