நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில், பள்ளி மாணவ, மாணவியர்கள் பயணிக்கும் வாகனங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும் பள்ளி வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து, இன்றைய தினம் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் சுமார் 272 பள்ளி வாகனங்கள் மூலம் மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு அதற்குரிய அங்கீகாரங்கள் பெற்றுள்ளதா என்பதை ஆய்வுகள் மேற்கொள்ள உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பள்ளி கல்லூரி வாகனங்களை வைத்து, உதகை வட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் சுமார் 110 வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இப்பள்ளி வாகனங்களில் தீயணைப்புக்கருவி, முதலுதவி பெட்டி, அவசரகால வழி மற்றும் வாகனத்தின் நிலை ஆகியவை பயன்பாட்டில் நல்ல
நிலையில் உள்ளனவா என்றும், வாகனத்தின் தகுதி சான்று, புத்தகங்கள் போன்றவற்றை சரியான முறையில் பாராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
நீலகிரி மலைப்பிரதேச மாவட்டமாக உள்ள காரணத்தினால் வாகனத்தினை எவ்வாறு இயக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்பு துறையின் மாவட்ட அலுவலர் அரி ராமகிருஷ்ணா தீயணைப்புத்துறை சார்பில் அங்கு வந்த ஓட்டுநர் நடத்துனர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதனை குறித்தும், பாதுகாப்பு முறைகள் குறித்தும், ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகள் செயல் முறையில் காண்பிக்கப்பட்டது, மேலும் சில பள்ளி வாகனங்களில் போக்குவரத்துத்துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை, சீர்செய்த பின் மீண்டும் அந்த வாகனங்கள் ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் இன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் அவர்கள் ஆய்வின் போது அறிவிக்கப்பட்டது,
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தீயணைப்புத்துறையின் மூலம் அளிக்கப்பட்ட தீ தடுப்பு தொடர்பான செயல்முறை காட்சிப்படுத்தியதை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் ஹரிராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை-1) முத்துசாமி, தீயணைப்புத்துறை பணியாளர்கள், பள்ளி கல்லூரி வாகன ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளையும் போக்குவரத்து துறையின் அனைத்து விதிமுறைகளையும் மற்றும் காவல்துறையின் கட்டுப்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு கூட்டாய்வு முகம் நிறைவு பெற்றது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0