குடோனில் பதுக்கிய 133 கிலோ குட்கா பறிமுதல்..வட மாநில வியாபாரி கைது.

கோவை பேரூர் காவல் நிலைய ,எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை பொருட்களை (குட் கா ) விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருப்பதாககாவல்துறைக்கு ரகசிய தகவல்கிடைத்தது.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயண உத்தரவின் பேரில் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடமான சுண்டக்காமுத்தூர் ,சிக்கன் வீதி பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர. அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுண்டக்காமுத்தூர், சிக்கன் வீதியை சேர்ந்த வட மாநில வியாபாரி சங்கர்லால் மகன் ஜூஹார்மல்(வயது 43) என்பவரை கைது செய்தனர்.. அவரிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள சுமார் 133 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.