குத்தகை விவசாயி தான் குத்தகை செய்யும் நிலத்தில் நெல், வாழை, கரும்பு, எள் போன்றவை சாகுபடி செய்தால் தான் தனது வாழ்வாதாரத்தையும், விவசாயத்தியும் காக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண்மை துறையே கூறுகிறது, ஆனால், திருச்சி வருவாய் நீதிமன்ற நீதிபதி குத்தகை விவசாயிகள் நெல் சாகுபடி மட்டுமே செய்ய வேண்டும், வேறு எந்த பயிறும் சாகுபடி செய்ய கூடாது என்று கூறி, அவ்வாறு இல்லை எனில் குத்தகை பதிவேட்டில் இருந்து ரத்து செய்துவிடுவேன் என்று உத்தரவிட்டு ரத்து செய்து வருகின்றார், இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமலும், வாழ்வதாரத்தை இழந்து வருகின்றனர், எனவே நியாயமா.. நியாயமா.. விவசாயிகளுக்கு அநீதி வழங்கும் வருவாய் நீதியரசரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், நியாயம் வேண்டியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு BABL அவர்களின் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 27.05.2024 திங்கட்கிழமை இன்று காலை 10 மணிக்கு திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள வருவாய் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
நடத்தினர். இது ஏராளமான விவசாயிகளை கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வருவான் நீதிபதியை வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0