கோவை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளிபடுகாயம்.

கோவை மதுக்கரை பக்கம் உள்ள புதுப்பதியை சேர்ந்தவர் சின்ன நீலன் (வயது 54) கூலி தொழிலாளி.இவர் இன்று காலையில் மாவுத்தம்பதி கிராமம் ஏ.சி.சி. பிரிவிலிருந்து சோளக்கரை செல்லும்ஊராட்சி ரோட்டில் நடந்து சென்றார்.அப்போது இவரை காட்டு யானைவழிமறித்து தாக்கியது..இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.