திருச்சியில் முத்தரையர் விழாவின் போது சாலை நடுவில் நடுப் பகுதியில் மேலே டிவிஎஸ் 50 பைக்கை இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் ஒட்டி செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன பெரும்பிடுகு முத்தரையர் திருவிழா கடைபிடிக்கப்பட்டது. சதய திருவிழாவை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அரசியல் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் இந்த விழாவுக்காகத் திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டூ வீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இளைஞர்கள் பலரும் பைக்கில் ஊர்வலமாக வந்தனர்.
அப்போது அங்கு வந்த இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்தும் கொடிகளை அசைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது ஒரு சிலர் சாலையை மறித்து பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். இதை தடுக்க முயன்ற போலீசாரிடம் வாக்குவாதத்திலும் சில இளைஞர்கள் ஈடுபட்டனர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
தீவிர விசாரணை வேண்டும் இந்த நிலையில், இன்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், டிவிஎஸ் 50 பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் திருச்சி மேம்பாலத்தில் உள்ள சென்டர் மீடியன் மேலே பைக்கை ஓட்டிச்செல்கிறார் சாகசம் காட்டுவதாக நினைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் பைக்கை இளைஞர் ஓட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த காணொளி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் சமூக வளையத்தினரும் பலரும் போக்குவரத்து போலீசாரிடம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் தான் அடுத்த முறை யாரும் இந்த உயிர் போகும் விளையாட்டில் இறங்க மாட்டார்கள் என்று பொதுமக்கள் முறையிட்டுள்ளார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0