கேரளா வனபகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை தாக்கி: கோவையில் ஒருவர் படுகாயம்

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் ஒட்டி உள்ள மதுக்கரை, வனச் சரகம் நவக்கரை பிரிவு சோளக்கரை காவல் சுற்றுக்கு உட்பட்ட பகுதியில் கேரளா வன எல்லையில் இருந்து தமிழ்நாடு எல்லையை கடந்து புரசக்காடு சராசத்தை நோக்கி வந்த ஒற்றைக் காட்டு யானை அவிலா ஃபார்ம் அருகில் மாட்டுச் சாலையில் உள்ள மாடுகளை வெளியே கட்டுவதற்கு சென்ற மாவுதம்பதி கிராமத்தைச் சேர்ந்த சின்ன நீலன் (54) என்பவரை எதிர்பாராத விதமாக ஒற்றை காட்டு யானை தாக்கியது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற வனவர் மற்றும் களப்பணியாளர்கள் தணிக்கை செய்ததில் சின்ன நீலன் என்பவருக்கு இடுப்பிற்கு மேல் காயங்களுடன் இருப்பதை உறுதி செய்து நவக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.