நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகளை வருடம் தோறும் வரவேற்கும் விதமாக தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வருடம் தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் நடப்பில் உள்ளதால் அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி காட்சி, அரசு ரோஜா பூங்காவில் ரோஜா காட்சி மற்றும் சிம் பூங்கா, குன்னூரில் பழக்காட்சி நடத்த முடிவெக்கப்பட்டு, கடந்த 10 ஆம் தேதி மலர் காட்சி மற்றும் ரோஜா காட்சி துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 64-வது பழக்காட்சி 24.05.2024 குன்னூர் சிம்பூங்காவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா இ.ஆ.ப அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது, உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கெளசிக் இ.ஆ.ப., தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் ஷபிலா மேரி , தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அப்ரூஸ் பேகம், டிடி, சிம்ஸ் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, லட்சுமணன், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்
இவ்வருடம் பழக்காட்சியில் சுமார் 5.50 டன் பழங்களை கொண்டு பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளது. சிறப்பம்சமாக சுமார் 1.75 டன் கருப்பு திராட்சை பழங்களை கொண்டு “கிங் காங்” உருவம் 6 அடி அகலம், 15 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது நாம் உண்ணும் உணவுகளில் உள்ள இரசாயன நச்சுப் பொருட்களை குறைத்து, உலகில் வாழும் அனைத்து உயிரினங்களை காப்பாற்ற விவசாயத்தை இருக்கும் இயற்கை ஊக்குவிக்கும் பொருட்டு ‘GO ORGANIC” “SAVE EARTH” போன்ற வாசகங்கள் எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களைகொண்டு வடிவமைக்கப்பட்டு
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிம் பூங்கா உருவாக்கப்பட்டு, 150 வருடங்கள் ஆனதை கொண்டாடும்
வகையில், தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு வகையான 150 ரக பழங்கள்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர்களை கவரும் வகையில், கார்ட்டூன் உருவங்களான டம்பெல் டாக் மினியன், டைனோசர், பிக்காச்சு, நத்தை போன்ற உருவங்கள் சுமார் 1.50 டன் எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, செர்ரி மற்றும் பேரிச்சை பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களின் பழங்களின் வளங்களை பறைசாற்றும் விதமாக பல்வேறு காட்சி திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பழங்களை கொண்டு விதவிதமான உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் புஜ்ஜி, தஞ்சாவூர் மாவட்டம் – தலையாட்டி பொம்மை, கன்னியாகுமரி மாவட்டம் தேனீ, நாமக்கல் மாவட்டம் டிராகன், கரூர் மாவட்டம் அன்ன பறவை, கடலூர் கலங்கரை விளக்கம், மதுரை மாவட்டம் மரவன் பட்டாம்பூச்சி, திருச்சி பாண்டா, பெரம்பலூர் மாவட்டம் இந்தியா கேட் மற்றும் கோவை ஒட்டகம் போன்ற உருவங்களை காட்சி படுத்தியிருந்தனர், மேலும், இவ்வருடம் பழக்காட்சிக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு மலர்
நாற்றுக்கள் வழங்கப்படவுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கண்டுகளிக்கும் விதமாக தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. 64வது பழக்காட்சியானது 24.05.2024 முதல் 26.5.2024 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகை புரிந்து இக்காட்சியினை கண்டு ரசிக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. நடைபெற்ற பழக்கம் கட்சியில் திரளான சுற்றுலா பயணிகள் அதிகமாக ஈர்க்கும் வகையில் பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்ட கிங் காங் உருவம்,டைனோசர், நத்தை, மினியான், கார்ட்டூன் பொம்மைகள்,போன்ற உருவங்களை எலும்புச்சை திராட்சை சாத்துக்குடி ஆரஞ்சு செர்ரி பழம், பேரிச்சை கொண்டு சுமார் 1.50 டன் பழங்களைக் கொண்டு வடிவம் அமைக்கப்பட்டுள்ள உருவங்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து தங்களுக்கு வேண்டிய புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றன மற்றும் நீலகிரி தோட்டக்கலை மழை பெயர்கள் துறையின் சார்பாக நீலகிரி பல்வேறு பகுதியில் விளையும் பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, இதனை நீலகிரி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கின்றன.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0