கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது .இது முருகப்பெருமானின் ஏழாவது படை வீடு என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. இதை யொட்டி நேற்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின்ன சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது இதைத் தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி ராஜ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு உச்சிக்கால பூஜை மற்றும் வள்ளி தெய்வானையுடன் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது .விசாகத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அன்னதானம் நடந்தது. பக்தர்கள் சுவாமியை எளிதாக தரிசிக்க துணை ஆணையர் ஹர்சினி மேற்பார்வையில்கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில்உதவி கமிஷனர் ரவிக்குமார் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் ஆகியோர் மேற்பார்வையில்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், மகேஷ் குமார் ,பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராஜரத்தினம் ஆகியோர் செய்திருந்தனர்.இதே போல கோவை கணபதி ஆவராம் பாளையம் ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவிலிலும், சரவணம்பட்டி கரட்டு மேட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ரத்தனகிரி முருகன் கோவிலிலும்,சுக்கிரவார்பேட்டையில் உள்ள அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவிலிலும் வைகாசி விசாக சிறப்பு பூஜை சிறப்பாக நடந்தது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0