ராமநாதபுரத்தில்ரூ 10 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு .மாநகராட்சி அதிரடி நடவடிக்கை.

ராமநாதபுரத்தில்ரூ 10 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு .மாநகராட்சி அதிரடி நடவடிக்கை. கோவை மே 23கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட ராமநாதபுரம், கொங்குநகர் பகுதியில் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது .இதை யடுத்து ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்உத்தரவின் பேரில் நகர அமைப்பு அதிகாரி குமார் மேற் பார்வையில் உதவி நகரமைப்பு அதிகாரி கோவிந்த பிரபாகர், உதவி பொறியாளர் மரகதம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரப்பு செய்திருப்பது தெரியவந்தது. இதை யடுத்து அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த நிலத்தை மீட்டு அறிவிப்பு பலகை வைத்தனர் .இதன் மதிப்பு ரூ 10 கோடிக்கு மேல் இருக்கும்..