கோவை அரசு கல்லூரி பேராசிரியை தூக்கு போட்டு தற்கொலை

கோவை பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் முத்துலிங்கம் ( வயது 53) இவரது மகள் செலின் ரேச்சல் (வயது 32 )இவர் கோவை அரசு கலை கல்லூரியில்தற்காலிக பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்குகடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், நாலு மாவடியை சேர்ந்த விஜய் கிங்ஸ்லி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இம்மானுவேல் என்ற ஒரு வயது மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது செலின் ரேச்சலினை பெற்றோர்கள் சமாதானம் செய்து வந்தனர் .நேற்று வழக்கம்போல தனது பெற்றோருக்கு செல்போனில் அழைத்த செலின் ரேச்சல் தனக்கு ஊதியம் வராதது குறித்து கேட்டு கணவர் தகராறில் ஈடுபட்டதாகவும், இதனால் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் செலின் ரேச்சல் செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார். வேலைக்கு சென்ற செலின் ரேச்சல் கணவர் விஜய் கிங்ஸ்லி மாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்தார் .வீட்டின் கதவை தட்டினார்.அப்போது கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது .இதில் சந்தேகம் அடைந்த அவர் பேரூர் போலீசருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் .சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தனர். அப்போது செலின் ரேச்சல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது .அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதிக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. மேலும் திருமணம் ஆகி 4 ஆண்டுகள் மட்டும்ஆவதால் ஆர்.டி.ஓ .விசாரணையும் நடந்து வருகிறது.