கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய போது, புது காலனியை சேர்ந்தவர் தங்கராசு ( வயது 69) கூலி தொழிலாளி ,இவரது மனைவி ஜோதி ( வயது 69 )தங்கராஜ் குடிப்பழக்கம் உடையவர். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜோதிகோபித்துக் கொண்டு அங்குள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார். தங்கராசு நேற்று மகன் வீட்டிற்குசென்று மனைவியை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார் .அவர் மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த தங்கராசு அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி ஜோதிஆனைமலைபோலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0