கல்லூரி அருகே பெட்டி கடையில் சிகரெட் விற்ற வியாபாரி கைது.

கோவை: பள்ளி – கல்லூரிகளுக்கு அருகே பீடி,சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி அருகே பெட்டி கடையில் சட்ட விரோதமாக சிகரெட் விற்பனை செய்வதாகரேஸ் கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா நேற்று மாலை அங்கு திடீர்சோதனை நடத்தினார். அப்போது அங்குமறைத்து வைத்திருந்த 20 பாக்கெட் சிகரெட்பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராமநாதபுரம், சிந்தாமணி, காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த விக்னேஷ்வர் (வயது 31 )கைது செய்யப்பட்டார் .இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.