விபத்தில் கோவை உதவி போலீஸ் கமிஷனர் உள்பட 2 பேர் படுகாயம்.

கோவை மாநகரம் காட்டூர் பகுதி போலீஸ் உதவி கமிஷனராக பணிபுரிந்து வருபவர் கணேஷ் .இவர் நேற்று முன்தினம் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் சின்னியம்பாளையத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் சோதனை செய்துவிட்டு சிங்காநல்லூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் எல். அன்டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது இரும்பு கம்பிகளை ஏற்றி வந்து கொண்டிருந்த லாரி ஒன்று மற்றொரு லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது ரோட்டில் இருந்த பள்ளம் காரணமாக இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த லாரியின் டிரைவர் வேகத்தை குறைத்தார் . அப்போது லாரிக்கு வெளியே 5 அடி வரை நீட்டிக் கொண்டிருந்த இரும்பு கம்பிகள் பின்னால் வந்து கொண்டிருந்த உதவி கமிஷனர் வாகனத்தின் கண்ணாடி உடைத்து சேதபடுத்தியது .இந்த விபத்தில் உதவி கமிஷனர் கணேஷ் மற்றொரு டிரைவர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பினர்.. இதை யடுத்துஅந்த லாரியை துரத்தி சென்று பிடித்தார். அதன் பிறகு அந்த லாரி கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு காவல் கொண்டு செல்லப்பட்டது .இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக .உதவி போலீஸ் கமிஷனர் கணேஷ்மற்றும் டிரைவர் உயிர் தப்பினார்.