வால்பாறையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை சப் கலெக்டர் பங்கேற்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழை முன்னிட்டு அதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அதற்க்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டு பெய்யும் பருவமழையை எதிர்கொள்ள அதற்க்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க் கொள்ள கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனைக்கு இணங்க பொள்ளாச்சி சப்கலெக்டர் கேத்தரின் சரண்யா தலைமையில் வாசுதேவன் மற்றும் அனைத்து துறைசார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி, தீயணைப்புத்துறை, வனத்துறை,காவல்துறை உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகளிடம் கடந்த வருடம் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிப்புகள் உள்ளாகும் பகுதிகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்தும் விரிவாகக் கேட்டறிந்து பருவமழையை எதிர்கொள்வதற்க்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசிக்கபட்டது அதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்களின் நலன் கருதி வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், அரசு மருத்துவமனையில் தற்போதைய நிலை தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்திகளுக்காக வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்