60 பவுன் நகைகேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல்

கோவை போலீஸ்காரர் – பெண் மீது வரதட்சணை கொடுமைவழக்கு. கோவை மே 15 கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் தினேஷ் குமார் (வயது 29 )இவருக்கும் அபிநயா (வயது 25) என்பவருக்கும் 25- 10 – 20 23 அன்று திருமணம் நடந்தது.திருமணத்தின் போது அபிநயா வீட்டார் 60 பவுன் நகை வரதட்சணையாக வழங்கினார்கள். இவர்கள் கோவை புதூரில் உள்ள சிறப்பு காவல் படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். -இந்த நிலையில் போலீஸ்காரர் தினேஷ் குமாரும் போத்தனூரை சேர்ந்த வாசுமதி (வயது 35) என்பவரும் அபிநயாவிடம் கூடுதலாக 20 பவுன் நகை வாங்கி வருமாறு கூறி மிரட்டினார்களாம்.இது குறித்து அபிநயா போத்தனூர்போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி விசாரணை நடத்தி போலீஸ்காரர் தினேஷ்குமார், வாசுமதி ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் , வரதட்சணை கொடுமைதடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.