நீலகிரியின் அழகினை இரசிக்க வரும். இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் தோட்டக்கலை துறை சார்பாக கோடை காலத்தில் நீலகிரி மாவட்டம் உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வருடம் தோறும் நடைபெறுகிறது, நீலகிரி மாவட்ட உதகையில் இன்று 126வது மலர்க்காட்சியும் 19வது ரோஜா காட்சியும் துவங்கப்பட்டது,
இக்காட்சியினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கிவைத்தார், இந்நிகழ்ச்சியில் அரசின் முதன்மை செயலாளர்/ வேளாண்மை உற்பத்தி ஆணையர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., வேளாண்மைத்துறை இயக்குநர் பா.முருகேஷ், இ.ஆ.ப., தோட்டக்கலை – மலைப் பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல்
பாண்டியன், இ.ஆ.ப., மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கீர்த்தி பிரியதர்ஷிணி மற்றும் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் ஷபிலாமேரி, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அரசு அலுவலர்கள்
ஆகியோர் கலந்துகொண்டு காட்சியினை சிறப்பித்தனர்., இந்த வருடம் நடைபெறும் 126வது மலர்க்காட்சியில் சுமார் 35,000 மலர்த் தொட்டிகள் தயார்படுத்தப்பட்டு பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் மலர்களைக் கொண்டு பிரம்மாண்ட மலர் அலங்காரம் மலர் மாடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 126வது மலர்க்காட்சியினைச் சிறப்பாக கொண்டாடும் வகையிலும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையிலும் 44 அடி அகலம், 35 அடி உயரத்தில் வால்ட் டிஸ்னி பிரம்மாண்ட உருவமும், அதன் கதாபாத்திர உருவங்களான மிக்கி மவுஸ், மின்னி மவுஸ், கூஃபி, புளூட்டோ, டொனால்ட் டக் ஆகியவை ஒரு இலட்சம் கார்னேசன், கிரைசாந்திமம், ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அனைவருடைய கண்களை கவரும் விதமாக அழகு தோற்றத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன,இந்த வால்ட் டிஸ்னி மாளிகையின் தோற்றத்தை மலர்களால் வெகு சிறப்பாக வடிவம் அமைத்ததை விழா நிகழ்ச்சி தொடர்ச்சியாக
பார்வையிட்டு வந்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷவ்தாஸ்
அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்
ஒரு லட்சத்திற்கும் மேலான மலர்களில் உருவாக்கப்பட்டுள்ளது , சுற்றுலா மற்றும் பொது மக்களை கவர்ந்திருந்தாலும் நீலகிரி மாவட்டம் உதகைக்கும் டிஸ்னி லேண்ட்க்கும் என்ன சம்பந்த என்பது தான் புரியவில்லை இன்று பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கேள்வி எழுப்பு உள்ளன நீலகிரி உதகையில் எத்தனையோ பாரம்பரியங்கள் இருந்தும்
மூன்று லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சிற்பங்கள்
நீலகிரி பாரம்பரியத்தை கொச்சைப்படுத்தி உள்ளது என்பதை நீலகிரி மலை ரயில் பாரம்பரிய சிறப்புமிக்கது உலக நாடுகளுக்கு தெரிந்த ஒன்றை ஓரம் கட்டி அலங்கரித்து வைத்துள்ளனர், நீலகிரி பாரம்பரியங்கள் வரலாற்றை அறியாத புதிதாக வரக்கூடிய அரசு தாவரவியல் பூங்கா அதிகாரிகளால் வரலாறு மிக்க சிறப்புள்ள இந்த அரசு தவறிகள் பூங்காவின் இயற்கையை கெடுக்கும் விதமாக பூங்காவில் தற்போது சில பழங்களை காங்கிரிட் சிமெண்ட்களில் கட்டமைக்கப்பட்டு இயற்கையின் பசுமையை காணப்படும் புல் தரைகளும் அழிந்து வருகின்றன, வரலாற்று சிறப்பு நாளுக்கு நாள் அழிந்து வருகிறது,
இதுபோன்ற வெளிநாட்டு டிஸ்னி லேண்ட் எனப்படும் கட்டிட உருவம் உருவாக்குவது நீலகிரி பாரம்பரியத்தையும் இயற்கையும் நன்றாக அறிந்து கொள்ளாத அதிகாரிகளின் மெத்தனப்போக்கு இதற்கு காரணம் இன்று தன்னார்வலர்கள் மற்றும் நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளனர்,இந்த 126 வது மலர்கட்சியை
துவக்கி வைக்க தமிழக தலைமை செயலர் ஷிவ் தாஸ் மீனா மிகவும்
தாமதமாக வந்து சேர்ந்தார் பகல் 12.30 மணிக்கு தான் மலர் காட்சி துவக்கி வைக்கப்பட்டது .
விழா மேடைக்கு கீழ் பத்திரிகையாளர் மற்றும் ஒரு சில அழைப்பாளர்களை தவிர இருக்கைகள் காலி. இதுவரை இல்லாத நடைமுறை ஒரே நாளில் அரசு தாவரவியல் பூங்கா
மலர் காட்சியும் ஒரே நாளில் துவங்கதான் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது,மற்றும்
நீலகிரி உதகை மலர்க்கட்சி வரலாற்று சிறப்புமிக்கது வெளிநாடு மற்றும் இந்தியாவில் இருந்து நடுத்தர மக்கள் தான் அதிகம் வருவார்கள் ஒரு குடும்பத்தில் இருந்து ஐந்து
பேர் வந்தால் இந்த நுழைவு கட்டணம் ஒரு பெரிய பாரமாக ஏற்பட்டுள்ளது கலைஞர் முதல்வராக இருந்த போது இலவசமாக அனுமதி வழங்கினார் பின்னர் 10 ரூபாய வசூலித்தனர். தற்போது இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த அதிகாரிகள் களங்கம் ஏற்படுத்துகிறார்கள் இது ஒரு பகல் கொள்ளை என்று தன்னார்வலர்கள் சுற்றுலா பயணிகள் உதகை மக்கள் கூறுகின்றனர்,
கார்டெனுள் சரியான டாய்லெட் மற்றும் புட் கோர்ட் இல்லை பராமரிப்பும் இல்லாமல் இருக்கும் இந்த மலர் காட்சி பூங்காவை பார்ப்பது சுற்றுலா பயணிகள் பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையும் அதிக நஷ்டத்தையும் தந்துள்ளது என்று தன்னார்வலர்கள் எச்சரிக்கின்றனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0