கோவை: சேலம் மாவட்டம் ,ஆத்தூர் பக்கம் உள்ள கீரிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் தெண்டுல்கண்ணன் ( வயது 24)சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் கோவை சரவணம்பட்டி கார்த்திக் நகரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று காற்றோட்டத்துக்காக அறை கதவை பூட்டிவிட்டு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து யார் ? என்று கேட்டார். அதற்குள் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இருவரையும், நண்பர்கள் உதவியுடன் கையும்களவுமாக பிடித்து சரவணம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நரியம்பட்டு, சங்கராபுரம்கிராமத்தை சேர்ந்தசக்திவேல் ( வயது 26 )அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பது தெரிய வந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0