கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் நேற்று திருச்சி ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி அருகே திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்ததாக 3பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5,660 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் சிங்காநல்லூர் போலீஸ்காலனியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 48) வரதராஜபுரம் சர்க்கரை செட்டியார் நகரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 40) சூலூர் பழனியப்ப தேவர் வீதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 54) என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 2பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இரு வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0