கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் ,தண்ணீர் டாங்க் வீதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் தினேஷ் குமார் ( வயது 27)இவர் வடக்கி பாளையம் சந்தைப்பேட்டை பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 10 -ந் தேதி இரவில்கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே வைத்திருந்த ஸ்மார்ட் போன், கீபேடு, ஸ்பீக்கர் ஹெட்செட், டிராவல் பேக், இரும்பு ராடு ,பணம ரூ. 2000 ஆகியவற்றைகாணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து வடக்கி பாளையம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர்பொன்ராஜ் வழக்கு பதிவு செய்து வடக்கி பாளையம், தெற்கு வீதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் பிரகாஷ் (வயது 24) என்பவரை நேற்று கைது செய்தார்.இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரிடம் இருந்து செல்போன் மற்றும் திருட்டு போன பொருட்கள் மீட்கப்பட்டன.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0