வால்பாறை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வனப்பேச்சியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிஷன் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வனப்பேச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றதை தொடர்ந்து சிறப்பு அலங்காரபூஜை நடைபெற்றது அதைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது முன்னதாக ஸ்ரீ முனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து விழா இனிதே தொடங்கியது விழா ஏற்பாடுகளை கணேசன் சூப்பர்வைசர் மற்றும் இரண்டாவது பிரிவு தொழிலாளர்கள் செய்திருந்த நிலையில் இரண்டாவது டிவிசன் ஃபீல்டு ஆபிசர் செந்தில் குமார் அண்ணாத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்து சிறப்பிக்க திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்திகளுக்காக வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்