கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான நிலை நிலவியதில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை தொடங்கி உள்ளது. இந்நலையில் கோவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மாலை நான்கு மணி முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் நகரின் சில இடங்களில் மிதமான மழை பொழிய துவங்கியது. அதன் படி,கோவை பீளமேடு, மசக்காளி பாளையம் போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பொழிந்தது. அதே போல சிங்காநல்லூர் பகுதியில் மிதமான மழை, காந்திபுரம், 100 அடி ரோடு ,உக்கடம், குணியமுத்தூர், காந்திபுரம், டவுன்ஹால், உள்ளிட்ட மாநகர பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் மாநகரம் முழுவதும் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது. திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0