தடுப்பு கம்பியில் பைக் போதி ஒருவர் சாவு.

கோவை பாப்பநாயக்கன்புதூர், மும்ம நாயக்கர் வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம் . இவரது மகன் சதீஷ்குமார் ( வயது 38) இவர் பைக்கில் மருதமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். விவசாய பல்கலைக்கழகம் 7-வது கேட் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி ரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி மீதுபைக் மோதியது. இதில் சதீஷ்குமார் படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து கோவை மேற் குபகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.