கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை – திருப்பூர் – ஈரோடு – நீலகிரி, மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக்கத்தில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. போலீசில் நடத்தப்படும் குறை தீர்ப்பு முகாம்களில் சிவில் விவகாரம் தொடர்பாக தான் புகார்கள் வருகிறது.போலீசாரின் தீவிர நடவடிக்கைகளால் விபத்து பலி வெகுவாக குறைத்துள்ளது. கோவை மாவட்டத்தில் மதுக்கரை – நீலாம்பூர் பைபாஸ் ரோடு விரிவாக்கம் செய்ய மாஸ்டர் பிளானில் திட்டம் வர உள்ளது. சிந்தாமணிபுதூர் சிக்னல் பகுதியில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது. அந்த இடத்தில் போதுமான இட வசதி, மேம்பாலம் பாதை இல்லாததால் வாகனங்களை திருப்பிவிட முடியவில்லை. பைபாஸ் ரோடு வழியாக கேரள மாநிலத்திற்கு செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில்இருந்து ஹவாலா பணத்துடன் செல்லும் நபர்கள் பிடிபடுகிறார்கள். கோவை சரக அளவில் 6,400 கிராம வீதிகள் உள்ளது .இந்த பகுதிகளை கண்காணிக்க 36,173 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது ஒரு ஆண்டில் 2 ஆயிரம் கேமராக்கள் அமைக்கப்பட்டது. பல்வேறு குற்றம் விபத்து மற்றும் சட்ட ஒழுங்கு வழக்குகளில் கேமரா காட்சி பதிவு உதவிகரமாக உள்ளது. ஊராட்சிகளின் உதவியுடன் கிராமத்தில் நுழைவு, முடிவு பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0